நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா குறித்து பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமைக்கான சங்கமமாக மகா கும்பமேளாவை பார்ப்பதாக தெரிவித்தார்.
மகா கும்பமேளாவில் இம்முறை இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இளைஞர்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிணைவது நம் நாட்டை வலிமைப்படுத்தும் என கூறினார். அதேபோல, நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில், பாரம்பரியத்தை அப்படியே பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொன்விழா நகர் பூத் எண் 179 பகுதியில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 118-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகனன கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.