தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் கார் ரேஸ் தொடரில் நடிகர் அஜித், முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியது. இந்நிலையில், அடுத்ததாக தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.
இந்தத் தொடரின் தகுதி சுற்றில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் பந்தய சுற்றை ஒரு நிமிடம் 49 விநாடிகளில் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.