கோ-கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது எனவும் எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.