வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்தும், சிபிசிஐடி போலீசாரை கேலி செய்யும் விதமாகவும் வேங்கைவயல் கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.