உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாளாமல் உலக சுகாதார மையம் தவறிவிட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.