ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் - சிறப்பு கட்டுரை!
Oct 25, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வரும் உள்ளூர் வாசிகளிடம், கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாகக் கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுடன் பேசி பழகும் ஆர்வத்தில் உள்ளூர் வாசிகள் பலர், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா எனக்கேட்டு அவர்களை அணுகுவதை நாம் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

இதுபோன்ற அணுகுமுறைகள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு தொடக்கத்தில் ஒருவித மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதுவே நாளடைவில் அவர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிடுகிறது. அமைதியான முறையில் தங்கள் நேரத்தை செலவிட விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இது ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ள ஏஞ்சலினா என்ற ரஷ்ய பெண், அதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஏஞ்சலினா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் உள்ளூர் வாசிகளின் வழக்கமான செல்ஃபி கோரிக்கைகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து தனது கைப்பையில் இருந்து “ONE SELFIE 100 RUPEES” என எழுதப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து அனைவரிடமும் காட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இப்படி செய்வதன் மூலம் செல்ஃபி கோரிக்கைகளுடன் தன்னை அணுகும் உள்ளூர் வாசிகளின் தொல்லை தீரும் எனக்கருதிய ஏஞ்சலினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காட்டிய காகிதத்தை பார்த்த பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்கள் பலர் வரிசைகட்டி நின்றதே அதற்கு காரணம்.

புன்னகையுடன் ஏஞ்சலினாவை அணுகிய அவர்கள், 100 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், தனது புத்தி கூர்மையால் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சம்பாதித்த 100 ரூபாய் நோட்டை பெருமையுடன் காண்பித்து ஏஞ்சலினா மகிழ்ச்சியடைந்த இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தனது பதிவில் “இந்தியர்கள் வெளிநாட்டவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பணம் செலுத்துகின்றனர். இதனால் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க வெளிநாட்டவர்கள் சோர்வடையவேண்டிய அவசியம் இல்லை. இனி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த தீர்வு எப்படியிருக்கு?” எனவும் ஏஞ்சலினா குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ள நிலையில், ஏஞ்சலினாவின் சிந்தனைமிக்க செயலை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags: ONE SELFIE 100 RUPEESஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம்Russian touristRs 100 for taking selfiesAngelinaAngelina selfies
ShareTweetSendShare
Previous Post

மண்டல – மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 440 கோடி!

Next Post

சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

Related News

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies