அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றார். ஜல்லிக்ட்டை பார்த்துக்கொண்டிருந்த போது அவரை மாடு ஒன்று வேகமாக முட்டியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் செல்வமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே, மாடு முட்டியதில் பெரியசாமி என்ற முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.