எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட உலக கோடீஸ்வரர்கள் ஒரே காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், பெரும் கோடீஸ்வரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் கூகுள், மெட்டா, ஸ்பேஸ் எக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாக நிற்கும் புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.