சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், திடீரென வலிப்பு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.