தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் வர்ஷிகா என்ற மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தடை தாண்டும் ஓட்டத்தில் 12 புள்ளி 20 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு வருகை தந்த வர்ஷிகாவுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.