டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற மறுநாளே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ ஆலோசனை மேற்கொண்டார்.
டிரம்ப் அமைச்சரவை முதல் இருதரப்பு பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் மேற்கொண்டது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், நேட்டோ நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்கு டிரம்ப் அளிக்கும் முக்கியத்துவமும் இதன்மூலம் வெளிப்படுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் இருக்கை போடப்பட்டதும் இந்தியா, அமெரிக்கா உறவின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்தது.