அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
நியூயார்க், கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதனால் அனைத்து இடங்களிலும் பல அடி அங்குலத்திற்கு பனி படர்ந்துள்ளது. அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும், விமான சேவை, ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளும் சிரமமடைந்துள்ளனர்.