மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவம் உண்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் எம்.பி நவாஸ்கனி செயல்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினைவாதியை போல நவாஸ்கனி செயல்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எல்.முருகன், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு நவாஸ்கனி இவ்வாறு செயல்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.