திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்த நவாஸ் கனி எம்பி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார்.
அவிரின் இந்த செயலுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் நவாஸ் கனி பதவி விலகக்கோரி இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டியில், திருப்பரங்குன்றத்தின் புனித தன்மையை கெடுத்து மதகலவரத்தை தூண்ட திட்டமா? என குறிப்பிட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தும் மக்களின் நம்பிக்கைமைவும் உணர்வுகளையும் புன்படுத்தும் விதமாக செயல்படும் நவாஸ்கனி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.