சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் வார்டு நிர்வாகியாக உள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அதலைக்கண்மாய் வயல் பகுதியில் முத்துப்பாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து தொடர்பாக முத்துப்பாண்டி மற்றும் அவரது சகோதரர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.