சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் – பானுமதி தம்பதி. கடந்த 18 நாட்களுக்கு முன் பானுமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கூலி வேலைக்கு செல்வதால் பெண் குழந்தையை வளர்க்க முடியாது என கருதிய தம்பதியர் குழந்தையை, பணத்திற்கு விற்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், செங்கோடன், பானுமதி மற்றும் குழந்தையை வாங்கிய ராஜா மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், குழந்தையை மீட்ட போலீசார் குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.