கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில் கோயிலுக்கு செல்லும் வழியை குறிக்கும் விதமாக கோயிலின் முகப்பு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இதனை அழிக்க வேண்டுமென திமுக பேருராட்சி தலைவர் அதை வரைந்த ஓவியரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஓவியத்தை அழிக்க அவர் முன்வராத காரணத்தால் வேறு ஒருவர் அந்த ஓவியத்தை அழித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஓவியத்தை மீண்டும் வரையவில்லை எனில் போராட்டம் நடத்தவோம் என கூறியுள்ளனர்.