டெல்டாகாரன் என தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் நிலை என்ன என்பதை தமிழக அரசு எண்ணி பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், டெல்டாகாரன் என தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை என விமர்சித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.