2020-ம் ஆண்டில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அபத்தமான இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய அதிபர் புடின், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என கூறினார்.
மேலும், அமெரிக்காவின் உதவியுடன் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷியா தயாராக உள்ளது எனவும் புதின் தெரிவித்தார்.