திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 21வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கிருந்த சிலர் அவரை தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.