மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.,
தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே பிவாண்டியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நாக்பூர் மகாநகர் சங்கசலக் ராஜேஷ் லோயா தேசியக் கொடியை ஏற்றினார்.