76-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டப்பட்டது. இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மங்கள இசை ஊர்தியும், போதை பொருள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில், காவல்துறை அலங்கார ஊர்த்தியும் அணிவகுத்து சென்றன.
மேலும், முதலமைச்சர் கோப்பையை மையப்படுத்தி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்டவை சார்பில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் இடம் பெற்றன.