டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு தின விழாவை ஒட்டி, டெல்லி கடமை பாதையில், கோவாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்தியின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து உத்தரகாண்டின் இயற்கை வளம், கலாசாரத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தியும், மகாபாரதம், ஒலிம்பிக்கை குறிக்கும் வகையில் ஹரியானாவின் ஊர்தியும், ரத்தன் டாடாவின் பெருமைகளை சொல்லும் ஜார்க்கண்டின் ஊர்தியும் ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
இதேபோல், பெண்கள் நலத்துறையின் ஊர்தி, குஜராத்தின் வளர்ச்சி திட்டத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி, ஆந்திரபிரதேசத்தின் அலங்கார ஊர்தி, பஞ்சாபின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஊர்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கும்பமேளாவின் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, போதி மரத்தடியில் புத்தர் இருக்கும் பீகாரின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, சிறுத்தைகளுடன் மிடுக்காக வந்த மத்தியபிரதேசத்தின் ஊர்தி அணிவகுப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, திரிபுரா மாநிலத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு, கோயில் சிற்பங்கள் கொண்ட கர்நாடகாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு கோலகலமாக நடைபெற்றது.