வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விசாரணை முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தினால் மறு விசாரணை நடத்துவதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். எனவே உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் காலங்களில் இதுபோன்ற கொடுஞ்செயல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.