கோவை அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை காட்டுயானை துரத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் காட்டுயானை ஒன்று உணவு தேடி உலா வந்தது. இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவரை யானை திடீரென துரத்த தொடங்கியது.
இதனைக் கண்ட அவர் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோடினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.