அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என திபெத்திய பௌத்த அறிஞரும், ஆசிரியருமான 7வது கியாப்ஜே யோங்ஜின் லிங் ரின்போச்சே ( 7th Kyabje Yongzin Ling Rinpoche ) தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் மகாகும்பமேளா திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், யோக குரு பாபா ராம்தேவின் இலவச யோகா மற்றும் தியான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், திபெத்திய பௌத்த அறிஞர் 7வது கியாப்ஜே யோங்ஜின் லிங் ரின்போச்சே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.