மது விற்பனையில் மட்டும்தான் திராவிட கட்சிகள் பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீதாலட்சுமியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஈழத்தில் தமிழ் மக்கள் எரிந்து கருகியபோது உதயசூரியன் வெகுண்டு எழவில்லை என்றும், கருணாநிதி ஈழ மக்களுக்கு செய்த துரோகம் ஒன்றில்லை இரண்டில்லை என்றும் சாடினார்.
100 நாள் திட்டத்தில் நட்டு வைத்த மரம் வெட்டிய கண்மாய், சீரமைப்பு செய்த சாலைகள் எத்தனை என கேள்வி எழுப்பிய அவர், மக்களை சோம்பேறியாக்கும் வகையில் 100 நாள் வேலைதிட்டம் உள்ளதாக விமர்சித்தார். திமுக அரசு சொல்வதையும் செய்யவில்லை சொல்லாததையும் செய்யவில்லை என்றும் சீமான் சாடினார்.