சென்னையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 7 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
பெசன்ட் நகர் கடற்கரையில், தனியார் மருத்துவமனை சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 7 ஆயிரம் பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.