கொடைக்கானலில் காவலர் வேடமணிந்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டி பகுதியை சேர்ந்த துரை ராஜ் என்பவர் காவலர் வேடமணிந்து, செல்வம் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், துரை ராஜை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து துரை ராஜ் காவலர் வேடமணிந்து மோசடியில் ஈடுபட்டதை அறிந்த போலீசார், வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.