வேங்கைவயல் வழக்கின் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்கக்கூடாது எனக்கூறி விசிக சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக உத்தரவிட்டனர். மேலும், வேங்கைவயல் வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தரவிட்டனர்.