குடியரசு தலைவர் மாளிகையில் 'திருமண வைபவம்' : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த 'ஜாக்பாட்' வாய்ப்பு!
Aug 22, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசு தலைவர் மாளிகையில் ‘திருமண வைபவம்’ : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பு!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி ஒருவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது பல தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படையில் இளம் பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாகக் கூறி, அண்மையில் வெளியான பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். அந்த பெண் அதிகாரிதான் CRPF உதவி கமான்டண்டான பூனம் குப்தா. ஆனால், அவர் பிரதமரின் பாதுகாப்பு படையில் இல்லை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான பூனம் குப்தா, கணிதத்தில் இளங்கலை பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகத்தில் இருந்து B.Ed பட்டமும் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டு UPSC-யின் CAPF தேர்வு எழுதிய பூனம் குப்தா தேசிய அளவில் 81-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். பின்னர் CRPF உதவி கமான்டண்டாக பொறுப்பேற்ற அவருக்கு, முதல் போஸ்டிங்கே நக்சல் தாக்கம் அதிகமுள்ள பீகார் பகுதியில்தான்.

அங்கு பூனம் குப்தா அர்பணிப்புடன் ஆற்றிய பணி அவரின் புகழை குடியரசு தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றது. அதன் பலனாகவே குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின், தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார் பூனம் குப்தா. இந்நிலையில், இவருக்கும், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் மற்றொரு CRPF உதவி கமான்டண்டான அவ்னேஷ் குமாருக்கும் வரும் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பூனம் குப்தாவின் சிறப்பான பணி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மனதை வெகுவாக கவர, அவரது திருமணம் பற்றி கேள்விப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில், திருமண வைபத்தை நடத்த பூனம் குப்தாவுக்கு அறிவுறுத்தி அதற்குரிய அனுமதியையும் வழங்கியிருக்கிறார்.

இதன் மூலம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பூனம் குப்தா – அவ்னேஷ் குமார் திருமணம் குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது. உரிய பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் திருமண நிகழ்வில் பங்கேற்க குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் மிக ACTIVE ஆக இருந்து வரும் பூனம் குப்தா, தனது பணி மற்றும் வாழ்க்கை குறித்த UPDATES-கள், WOMEN EMPOWERMENT மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஒரு ராஜ வம்சத்து பெண்ணுக்கே கிடைக்காத இத்தகைய வாய்ப்பு, குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள இளம் பெண் அதிகாரிக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதைக்கேட்டு அனைவரும் வாய்பிளப்பதில் ஆச்சரியம் இல்லைதானே.

Tags: India'Wedding ceremony' at the President's House: 'Jackpot' chance for a security officer!President House
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

Next Post

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

Related News

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies