சட்டவிரோத குடியேறிகளால் டெல்லியின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சார்பில் டெல்லி குறித்து 114 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவாக அதிக நெரிசல் ஏற்படுவதுடன் குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற பொது சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.
மேலும், போலி அடையாள ஆவணங்களால் சட்ட ரீதியான அலுவல்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளிலும் கடும் பாதிப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.