திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த அறப்போராட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் குவிந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் அசைவ உணவு உட்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பாஜகவினர் திருப்பரங்குன்றத்தில் கூடி முழக்கமிட முடிவு செய்தனர்.
இதையொட்டி, திருப்பரங்குன்றம் செல்வதற்கு முன்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் பாஜகவினர் குவிந்தனர். அவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், பாஜக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் தங்க. கென்னடி தலைமையில், காவல் துறையை கண்டித்து பாஜகவினர் முழக்கமி;llஅனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.