அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்பேது, ஞானசேகரனின் உரையாடல் பதிவு அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஞானசேகரனும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, வரும் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் தடயவியல் துறை அலுவலகத்தில் ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய நீதிபதி அனுமதி அளித்தார்.