திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், ஒரே நாளில் மலையப்ப சுவாமி ஏழு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்.
அதன்படி, சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். தொடர்ந்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சர்வ பூபால அலங்காரம், கல்ப விருட்ச வாகனம், சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனங்களில் அடுத்தடுத்து அவர் உலா வந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.