எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறையில், சென்னையைச் சேர்ந்த 22 வயது தொழில்நுட்ப வல்லுநர் ( Akash Bobba )ஆகாஷ் பாபா இடம் பெற்றிருக்கிறார்.
கூட்டாட்சி அனுபவம் மற்றும் பொறுப்பு மிக்கப் பணியைக் கையாள கூடிய திறமை இல்லாதவர்களை எலான் மஸ்க், அரசின் செயல்திறன் துறையில் நியமித்திருப்பதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. யார் இந்த (Akash Bobba) ஆகாஷ் போபா ? அவரின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அரசின் செயல் திறனை மேம்படுத்துவற்கான புதிய துறையை Department of Government Efficiency (DOGE) துறையை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ளார்.
அமெரிக்க அரசு அமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ள, அரசு செயல் திறன் துறையின் தலைவராக, உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.
இந்திய வம்சாவளியினரான தொழில் அதிபர் விவேக் ராமசாமியும் எலான் மஸ்க்-வுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் அறிவித்தார்.
இரண்டாவது முறை, அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற மூன்றாவது நாளே, அரசு செயல் திறன் துறையின் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்.
முக்கியமாக, அமெரிக்க அரசு துறைகள் செய்யும் வீண் செலவுகள் காரணமாக, அரசுக்கு ஆண்டுதோறும், 135 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படுகிறது.
இந்த இழப்பைத் தடுத்து, அரசு நிர்வாகத்தைச் சீரமைத்து, அமெரிக்க மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு செயல்திறன் துறையில், பணியாற்றுவதற்காக அதன் தலைவர் எலான் மஸ்க், ஆறு பேர் கொண்ட இளம் தொழில்நுட்ப வல்லுனர் குழுவை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆறு பேரும் 19 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(Akash Bobba) ஆகாஷ் போபா , (Edward Coristine) எட்வர்ட் கோரிஸ்டைன், (Luke Farritor) லூக் ஃபாரிட்டர், (Gautier Cole Killian), கௌடியர் கோல் கில்லியன், (Gavin Kliger) கேவின் கிளிகர் மற்றும் (Ethan Shaotran) ஈதன் ஷாட்ரான் ஆகிய ஆறு பேரும் எலான் மஸ்கின் SpaceX முன்னாள் ஊழியர்கள் ஆவார்கள்.
இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ள, இந்திய வம்சாவளியினரான ஆகாஷ் போபா, சென்னையைச் சேர்ந்தவராவார்.பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், மதிப்புமிக்க மேலாண்மை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தில் தேர்ந்தவராவார். மேலும், Meta மெட்டா, Palantir பலந்திர் மற்றும் Bridgewater Associates பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.
AI, DATA ANALYSIS எனப்படும் தரவு பகுப்பாய்வு மற்றும் நிதி வடிமைப்பு ஆகியவற்றில் சிக்கல் தீர்க்கும் திறனில் ஆகாஷ் போபா சிறந்து விளங்கினார் என்று அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொறியாளர்கள் தங்கள் கனவு வேலைகளை எப்படி எவ்வாறு பெற்றனர் என்பது குறித்து நேர்காணல் செய்யும் அமன் மனாசிரின் PODCAST நிகழ்ச்சியில் , ஆகாஷ் போபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி பின்னர் நீக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
ஆகாஷ் போபாவும், Coristine கோரிஸ்டைனும் அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகத்தில் தொழில் நுட்பத்தில் நிபுணர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத்தில் திறமை, AI தரவு பாதுகாப்பு ஆகிய திறமை இருந்தபோதிலும், இதில் யாருக்கும் மக்கள் சேவை, மற்றும் அரசு நிர்வாக விவகாரங்களில் முன் அனுபவம் கொஞ்சமும் இல்லை.
அரசு செயல்திறன் துறையில் எலான் மஸ்க் நியமித்துள்ள அனைவருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதி, பொதுவாக விரிவான பின்னணி சோதனைகளுக்குப் பிறகே, அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு சலுகையாகும்.
அரசின் நிதி கணக்குத் தொடர்பான இரகசிய ஆவணங்களை எலான் மஸ்க்கின் புதிய ஊழியர்கள் அணுகுவதைத் தடுத்த ( U.S. Agency for International Development USAID )அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டு மூத்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டுள்ளனர்.
இதனால், General Services Administration (GSA) அதாவது பொது சேவைகள் நிர்வாகம் மற்றும் Office of Personnel Management (OPM) அதாவது பணியாளர் மேலாண்மை அலுவலகம் போன்ற கூட்டாட்சி நிறுவனங்களில் இவர்களால் பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது.
DOGE என்பது அரசு நிர்வாகத்தை, நவீனமயமாக்குவதற்கு அவசியமான தொடக்கம் என்று கூறப்படுகிறது. என்றாலும், நாட்டின் பாதுகாப்புக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமெரிக்க அரசு பதவிகளில், போதிய நிர்வாக தேசிய பார்வை இல்லாத இளைஞர்கள் திடீரென நியமிக்கப்படுவது, திறன், மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பாதுகாப்புகள் குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர், அமெரிக்க அரசு இயந்திரத்தைக் கையகப்படுத்து வருகிறார்.
எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல் திறன் துறை விஷயத்தில் , அமெரிக்க நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.