ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடா கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை காட்டு யானை சூறையாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் உள்ள தெங்குமரஹடா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி வலம் வரும் காட்டு யானைகள் உணவு பொருட்களை சூறையாடுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குள் புகுந்த காட்டு யானை அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை சூறையாடின. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.