கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன், டெல்லில் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்த புகைப்படங்களை பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் இந்திய கடற்படை மேலும் வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.