நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கொண்ட நகரம் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாவட்டத்திற்குள் வரும் லாரிகளை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜ கோபாலபுரம் பகுதியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு இருப்பது மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இப்பகுதியில் போலீஸார் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.