கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், மலையடிகுப்பம் பகுதியில், 165 ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் தோல் தொழிற்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு விவசாயிகள் மற்றும் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.