கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நர்மதா, முருகன் என்பவரை காதலித்து கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இ
வர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த நர்மதா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும், முருகன் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நர்மதா, வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த நர்மதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பு, தனது தாய் மற்றும் சகோதரரிடம், தான் இறந்துவிடுவேன் என்றும், தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படியும் கூறிய வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.