வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னணி கழகத்தினர் 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவை கலந்த விவகாரத்தில் பட்டியலின மக்கள் மீது குற்றம் சாட்டி சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதனை கண்டித்தும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும், பழைய பேருந்து நிலையத்தில் தமிழர் முன்னணி கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.