இஸ்லாமியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதாகவும்,
அதைப் போக்குவதற்காக தாம் இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததாகவும் மௌலானா சாஜித் ரஷிதி கூறியுள்ளார்.
இதேபோல, இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு பெருந்திரளாக ஆதரவு தெரிவித்தால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஆட்டம் கண்டுவிடுவர் என்றும், டெல்லியில் பாஜக ஆட்சியமைந்து ஒருவேளை இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் நபராக தாம் இருப்பதாகவும் அந்த வீடியோவில் மௌலானா சாஜித் ரஷிதி உறுதியளித்துள்ளார்.
மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக தொடர்பாக எழுந்த அச்சமே இந்த வீடியோவை வெளியிட காரணமாக இருந்ததாக கூறிய அவர்,
அச்சத்துடன் எத்தனை நாட்கள்தான் வாழ முடியும் என இஸ்லாமியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.