அரசின் நலத்திட்டங்களை முடக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்த அவர்,
ஒரு குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கட்சியால், ஒருபோதும் அனைவரது வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி காங்கிரஸ் கெளரவிக்கவில்லை என விமர்சித்தார்.
மேலும் பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டதால் நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதி பெருமூச்சு விடுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.