திருப்பரங்குன்றம் மலை தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமான மலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
சமய வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி தமிழ்நாட்டை மதவாத மண்ணாக மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு தமிழர்கள் ஒருபோதும் இடம் அளித்திடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியும், மனித நேயத்தாலும் தமிழகம் எப்போதும் அமைதி காத்து உலகத்திற்கே முன் மாதிரியாக திகழ்ந்ததாகக் கூறியுள்ள சீமான்,
எனவே நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டு சிக்கல்களை நாமே பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், இருபுறமும் உள்ள சமயப் பெரியவர்கள் இதற்கான முன்னெடுப்பை கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.