சிவகங்கை அருகே பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள், பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் குன்றக்குடியில் ஒன்றுகூடி அங்கிருந்து பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் வழியாக, காவடிகளை தோளில் சுமர்ந்து பாதையாத்திரையாக சென்று தைப்பூச திருநாளன்று பழனி முருகனை தரிசனம் செய்வது வாடிக்கை.
அந்த வகையில் இந்த ஆண்டு காவடிகளை சுமர்ந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க கண்டவராயன்பட்டியில் சுமார் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ஊர் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
தைப்பூச திருநாளன்று பழனி சென்றடையும் இவர்கள் மகம் நட்சத்திரத்தன்று மலையேறி காவடிகளை செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்வார்கள்.