மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் 43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை, திண்டுக்கல் வழியாக அவர்கள் பழனிக்கு செல்லவுள்ளனர்.