தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குன்றக்குடியில் இருந்து 320 சர்க்கரை காவடிகளுடன் புறப்பட்ட நகரத்தார்கள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஜனை மடத்தை சென்றடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து காவடி ஆட்டத்துடன் பழனியை நோக்கி புறப்பட்டனர். சர்க்கரை காவடிகளுடன் சென்ற நகரத்தார்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.