மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு திருச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் முன்பு தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டி மீது மனிதக்கழிவு வீசப்படவில்லை என்றும், அப்பகுதியைச் சேர்ந்த யாரோ உணவு பொட்டங்களை வீசி சென்றதாகவும் கூறினார்.
போலீசார் முறையாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அவர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்தார்.