தியானத்தின் மூலம் மன அமைதி, நிம்மதி கிடைக்கப்பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு தியானம் செய்தார்.
இது குறித்து வீடியோ வெளியிட்ட அவர்,
2002ஆம் ஆண்டு பரமஹம்ச யோகானந்தா ஆசிரமத்திற்கு முதல்முறை வந்தபோது இவ்வளவு அமைதி தனக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
ஆனால், தற்போது தியானம் செய்தபோது மிக சிறந்த அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். குருவின் அறையில் அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ள அவர், தியானத்தின் மூலம் மன அமைதி ஏற்பட்டதாக
கூறியுள்ளார்.